"தைவான் மீது சீனா போர் தொடுத்தால், தைவானை அமெரிக்கா காக்கும்" - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
தைவான் மீது சீனா போர் தொடுத்தால், சீனாவிடமிருந்து தைவானை காக்க அமெரிக்கா துணை நிற்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தைவானை சீனாவுடன் இணைக்க, தேவைப்பட்டால் படை பலம் பயன்படுத்தப்படும் என சீனா தெரிவித்துள்ள நிலையில், தைவான் வான் எல்லைக்குள் சென்ற ஆண்டு செப்டம்பர் முதல் 800-க்கும் அதிமான முறை போர் விமானங்களை சீனா பறக்கவிட்டதாக தைவான் குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், தைவானை பாதுகாக்கும் பொறுப்பு அமெரிக்காவுக்கு உள்ளதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
Comments